தொடர்புக்கு : 93675 23490,90809 14466, 90037 64607            

Blog Details

பிறந்தநாள் பலன்கள் - 1, 10, 19, 28

24.2.2019 முதல் 2.3.2019 வரை நினைத்த காரியத்தை எப்பாடுபட்டாவது சாதிக்கும் ஆற்றலை உடைய ஒன்றாம் எண் அன்பர்களே நீங்கள் வைராக்கியம் மிக்கவர்கள். இந்த வாரம் எல்லாவற்றிலும் நன்மை ஏற்படும். பணவரத்து இருக்கும். உறவினர் வருகையால் மனம் மகிழ்ச்சியடையும் சம்பவம் நிகழும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரலாம். செலவும் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டி வரலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடனை திருப்பி செலுத்துவீர்கள். உத்தியோகஸ்தர்கள் கோபத்தை குறைத்துக்கொள்வது நன்மையை தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் வழியில் சந்தோஷம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். பயணங்கள் செல்ல நேரிடும். செலவு கூடலாம். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. பரிகாரம்: நவகிரகங்களில் சூரியனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். உடல் ஆரோக்கியம் அடையும்.