தொடர்புக்கு : 93675 23490,90809 14466, 90037 64607
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்து கொண்டு உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், தாயாருடன் மனக்கசப்பையும், வீண் விவாதங்களையும், உடல்நலக்குறைவுகளையும் கொடுத்து வந்த ராகுபகவான் இப்பொழுது ராசிக்கு 3ம் வீட்டிற்கு வந்தமருவதால் எதிலும் வெற்றியுண்டாகும். தடைகள் யாவும் நீங்கும். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன்மனைவிக்குள் ஈகோவால் இருந்த இடைவெளி குறையும். தாம்பத்யம் இனிக்கும். நெடுநாளாக வாங்க நினைத்திருந்த நவீன மின்னணு, மின்சார சாதனங்களை வாங்குவீர்கள். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். விரைந்து முடித்து கிரகப்பிரவேசம் செய்வீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு தள்ளிப் போய் கொண்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு கூடி வரும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வி.ஐ.பிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என உங்களின் நட்பு வட்டம் இனி விரியும். தாயாருக்கு இருந்து வந்த சர்க்கரை நோய், மூட்டுவலி எல்லாம் குறையும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பெரிய நோய் இருக்குமோ என்ற பயம், கனவுத் தொல்லை, தூக்கமின்மை எல்லாம் நீங்கும். இளைய சகோதர வகையில் சில நேரங்களில் மனஸ்தாபங்கள் வந்தாலும் பாசம் குறையாது.